சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் தொடர்பில் விசாரணை | தினகரன்


சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் தொடர்பில் விசாரணை

சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் தொடர்பில் விசாரணை-Police launch probe over threatening Swiss Embassy worker

இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் பெண் பணியாளர் ஒருவர், இனந்தெரியாதோரால் அச்சுறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் பொலிஸாரும் குற்றப்புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விசாரணைகளை முன்னெடுக்க,  சுவிஸ் தூதரகத்திடமிருந்து முழுமையான ஒத்துழைப்பு கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பெண் கடந்த திங்கட்கிழமை (25) இனந்தெரியாதவர்களினால் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டு, இரு மணி நேரங்களில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், நேற்றையதினம் (27) அறிக்கையொன்றை விடுத்துள்ள சுவிஸ் வெளிவிவகார அமைச்சு, அதனை உறுதிப்படுத்தியுள்தோடு குறித்த ஊழியரிடமிருந்து தூதரக தகவல்களை வலுக்கட்டாயமாக பெற முயன்றதாக அது சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இலங்கை அரசிற்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் உடனடியானதும் முழுமையானதுமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.


Add new comment

Or log in with...