அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம்: ஊழல் - மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு | தினகரன்


அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம்: ஊழல் - மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற ஊழல் -மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக சுகாதார, சுதேச வைத்திய, மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார்.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத் தலைவராக செயலாற்றிய ரூமி மொஹமட், மருந்துகளை இறக்குமதி செய்யும் போதும் அதனை பகிர்ந்தளிக்கும் போதும் ஊழல் - மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என்றும் அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளார் என்றும் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முற்பட்டார் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவிருந்த ரூமி மொமஹட் தொடர்பில் தாம் அவதானமாக இருப்பதாகவும் விசாரணைகள் முடியும் வரை எவரையும் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டார். குடிசையொன்றின் பின் பகுதியில் சடலமாக காணப்பட்டார்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து காத்தான்குடி பொலிஸார் அந்த இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனர். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் தனது மனைவியை விட்டும் பிரிந்திருப்பதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதுடன் பொலிஸ் தடவியல் அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...