வீதி விபத்தில் 59 வயதான ஆசிரியை பலி | தினகரன்


வீதி விபத்தில் 59 வயதான ஆசிரியை பலி

வீதி விபத்தில் 59 வயதான ஆசிரியை பலி-Accident-59 Yr Old Teacher Dead

மரிஸ்வத்துன வீதியில புத்பிட்டிய பிரதேசத்தில் விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (26.11.2019) காலை 07.50 மணியளவில் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரிஸ்வத்துன வீதியில புத்பிட்டிய பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மிரிஸ்வத்துன நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி அவ்வீதியில் பாதசாரி கடவையின் ஊடாக கடந்த குறித்த ஆசிரியை மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த குறித்த ஆசிரியை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணித்தவரின் சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 59 வயதுடைய வரப்பளான, உடுத்திரிபிட்டியவைச் சேர்ந்த உதயனி ரம்யலதா கொடிகார எனும் பாடசாலை ஆசிரியையாவார்.

இவ்விபத்திற்கு காரணமான முச்சக்கரவண்டியின் பெண்சாரதி காயமடைந்த நிலையில் மல்வத்துஹிரிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மல்வத்துஹிரிபிட்டிய பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.


Add new comment

Or log in with...