நாளைய கொழும்பிற்குள் முன்னேறிச் செல்லும் ‘Marina Square’ | தினகரன்


நாளைய கொழும்பிற்குள் முன்னேறிச் செல்லும் ‘Marina Square’

நாளைய கொழும்பிற்குள் முன்னேறிச் செல்லும்-‘Marina Square’-MARINA SQAURE FORGES AHEAD INTO TOMORROWS COLOMBO
எக்சஸ் என்ஜினியரிங் பி.எல்.சி. மற்றும் சைனா ஹார்பர் என்ஜினியரிங் லிமிட்டெட் நிறுவனங்களின் உயரதிகாரிகள்.

‘மரினா ஸ்குயார்’ (Marina Square) செயல் திட்டத்தின் பிரதான ஒப்பந்தக்காரராக சைனா ஹார்பர் என்ஜினியரிங் கம்பனி (CHEC) தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இச் செயல் திட்டத்தின் அற்புதமான கட்டமைப்பு நிர்மாணப் பணிகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. CHEC நிறுவனமானது 1998ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் அபிவிருத்தியில் சிறப்பான முறையில் தன்னை ஈடுபடுத்தி வருவதுடன், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிச்சுற்று அதிவேக நெடுஞ்சாலை, ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள சர்வதேச விமான நிலையம், கொழும்பு தெற்கு கொள்கலன் முனையம், துறைமுக நகரம், சங்கரி-லா, ஹெவ்லொக் சிற்றி போன்ற மிகப் பெரிய நிர்மாணச் செயல் திட்டங்களையும் அதேபோன்று மேலும் பல பாரிய உட்கட்டமைப்பு செயல் திட்டங்களையும் இந்நிறுவனம் செய்து முடித்திருக்கின்றது.

நாளைய கொழும்பிற்குள் முன்னேறிச் செல்லும்-‘Marina Square’-MARINA SQAURE FORGES AHEAD INTO TOMORROWS COLOMBO

(இ-வ) சைனா ஹார்பர் என்ஜினியரிங் லிமிட்டெட் (இலங்கை) முகாமைத்துவப் பணிப்பாளர் சங்க் சியோகியங், எக்சஸ் என்ஜினியரிங் பி.எல்.சி. நிறுவனத்தின் தலைவர் சுமால் பெரேரா, எக்சஸ் என்ஜினியரிங் பி.எல்.சி. முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கிறிஸ்டோபர் ஜோசுவா ஆகியோர்.

அங்குரார்ப்பண நிகழ்வில் எக்சஸ் என்ஜினியரிங் பி.எல்.சி. நிறுவனத்தின் தலைவர் சுமால் பெரேரா உரையாற்றுகையில், “எமது 2 பல்தேசிய பங்காளி நிறுவனங்கள், இலங்கையில் வைத்துள்ள பற்றுறுதிக்காகவும் ‘மரினா ஸ்குயார்’ செயல் திட்டத்தில் எக்சஸ் என்ஜினியரிங் நிறுவனத்துடன் பங்காளியாக இணைந்து கொள்வதில் கொண்டுள்ள நம்பிக்கைக்காகவும் அந்நிறுவனங்களுக்கு நான் நன்றிகூற விரும்புகின்றேன். ‘போர்ச்சூன் 500’ தரப்படுத்தலில் உள்ளடங்கும் சைனா ஹார்பர் என்ஜினியரிங் போன்ற நிறுவனமொன்று இவ்வாறான ஒரு செயல் திட்டத்தை முன்னெடுப்பதற்காக பங்காளியாக இணைந்து கொள்வது மிகவும் அபூர்வமானதாகும். அந்தவகையில், ஏனைய உள்நாட்டுக் கம்பனிகளுக்கு நாம் ஒரு முன்மாதிரியை காண்பித்துள்ளோம். அதனடிப்படையில், அந்நிறுவனங்கள் எந்தத் தொழில்துறையை சேர்ந்தவையாக இருந்தாலும், அவர்கள் தமது வெளிநாட்டுப் பங்காளிகள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஊக்கமளிக்கலாம்” என்றார்.

நாளைய கொழும்பிற்குள் முன்னேறிச் செல்லும்-‘Marina Square’-MARINA SQAURE FORGES AHEAD INTO TOMORROWS COLOMBO

‘மரினா ஸ்குயார்’ செயல் திட்டத்தை நிறைவேற்றும் காலஎல்லை 

சுமால் பெரேரா மேலும் தெரிவிக்கையில், “மரினா ஸ்குயார் செயல் திட்டமானது முன்னொருபோதுமில்லாத அளவுக்கு வெற்றியை அடைந்து கொள்வதையும் அதேபோன்று எதிர்கால வாடிக்கையாளர்கள் தமது முதலீடுகளின் மீது சிறந்த வருவாயை பெற்றுக் கொள்வதையும் உறுதிப்படுத்துவதற்காக எமது கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட அனைத்து விடயங்களிலும் எம்மால் முடியுமான சகல நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம்”  என்று குறிப்பிட்டார்.

‘மரினா ஸ்குயார்’ (Marina Square) செயல் திட்டமானது உண்மையிலேயே ஒரு பல்தேசிய ரியல் எஸ்டேட் முதலீடாகும். இந்த தனிச் சிறப்புவாய்ந்த செயல் திட்டத்தை ஒன்றிணைந்து முன்னெடுப்பதற்காக, மூன்று நாடுகளைச் சேர்ந்த இத்துறையில் சிறந்து விளங்கும் மிகப் பெரிய மூன்று நிறுவனங்கள் முதன்முதலாக முன்வந்திருக்கின்றன. அதன் பிரகாரம், துறைமுகத்திற்கு முன்பக்கமாக, கடலை நோக்கியதான இந்த வதிவிட அபிவிருத்திச் செயல் திட்டத்தை மேற்கொள்வதற்காக - இலங்கையின் எக்சஸ் என்ஜினியரிங், சீனாவின் சைனா ஹார்பர் என்ஜினியரிங் கம்பனி மற்றும் சிங்கப்பூரின் முஸ்தபா நிறுவனம் ஆகியவை ஒன்றாக இணைந்துள்ளன.

சைனா ஹார்பர் என்ஜினியரிங் கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளர் சங்க் சியோகியங் கூறுகையில், “மரினா ஸ்குயார் செயல் திட்டத்தின் பிரதான ஒப்பந்தக்காரராக தெரிவு செய்யப்பட்டதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கையில் நாம் முன்னெடுத்த பிரமாண்டமான பல செயல் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவுசெய்தில் நாம் பெற்றுக்கொண்ட பரந்துபட்ட அனுபவம், ‘மரினா ஸ்குயார்’ செயல் திட்டத்தின் பிரதான ஒப்பந்தக்காரராக எமது நிறுவனம் தெரிவு செய்யப்படுவதற்கு உதவியுள்ளது என நாம் நம்புகின்றோம். மிகக் குறிப்பாக, எமது நிறுவனம் ‘சங்கரி-லா ரெஸிடன்சீஸ்’ செயல் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தமை மற்றும் ‘ஹெவ்லொக் சிற்றி’ அபிவிருத்தியியில் எமது ஈடுபாடு ஆகியவை இந்த வாய்ப்பை பெற்றுத் தந்திருக்கின்றது. ‘சங்கரி-லா ரெஸிடன்சீஸ்’ திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த நிர்மாணிப்பு குழுவினரையே ‘மரினா ஸ்குயார்’ செயல் திட்டத்திலும் ஈடுபடுத்த நாம் உடன்பட்டிருக்கின்றோம்” என்றார்.

கொழும்பின் மேல்நிலை மரினா ஸ்குயார் செயல் திட்டமானது, வீட்டுரிமையாளர்களுக்கு  வழங்கும் வதிவிட அலகுகள் மற்றும் பொதுவான வசதிகள் என்பவற்றின் ஊடாக ‘நகரச் சொகுசு’ கருப்பொருளை வெளிக்காட்டுகின்றது. நடப்பதற்கான ஃ சீராக ஓடுவதற்கான இரண்டு ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை கொண்ட பாதைகள், பூந்தோட்ட பரப்புக்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அமர்வதற்கான பகுதிகள் போன்ற மேலதிக வசதிகளும் இங்கு காணப்படும். பிரமாண்டமான நீச்சல் தடாகம், கிளப் ஹவுஸ், விளையாட்டு அறை, முன்னொருபோதுமில்லாத அளவுக்கு பரந்துபட்ட சிறுவர் விளையாட்டுத் திடல், உள்ளக மற்றும் வெளிப்புற ஜிம்கள் போன்ற அனைத்து வசதிகளும் நகரவாசிகளை மனத்திற் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமன்றி, இக்கட்டிடத் தொகுதிக்குள் அமைக்கப்படும் வணிகப் பிரிவும் கூட நகரச் சொகுசு வாழ்க்கை என்ற தொனிப்பொருக்கு அமைவாக ‘மரினா ஸ்குயார்’ குடியிருப்பாளர்களின் வசதியை கருத்திற் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வணிகப் பிரிவானது, உணவு மையம், சில்லறை விற்பனை நிலையங்கள், ஆரோக்கிய சேவைகள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. அத்துடன் அங்குள்ள குறிப்பிட்ட சில அலுவலக பகுதிகள் இங்கு வசிக்கின்ற குடியிருப்பாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே அமைக்கப்பட்டு இருக்கின்றன. 

‘மரினா ஸ்குயார்’ குடியிருப்பு தொகுதி கடலுக்கு முன்பக்கமாக அமைந்துள்ளமையால், கடல், நகரம் மற்றும் மலைகளின் அற்புதமானதும் திகைப்பூட்டுவதுமான காட்சிக் கோணங்களை அங்குள்ள அநேகமான குடிமனைகளில் இருந்து கண்டுகளிக்கக் கூடிய வசதி காணப்படுகின்றது. துறைமுக நகர செயல் திட்டத்துடன் சேர்ந்து பரிணாம வளர்ச்சி காணும் கொழும்பின் எதிர்காலத்தை காண்பதற்கு இந்த கொழும்பு மேல்நிலை மரினா ஸ்குயார் (Marina Square Uptown Colombo) கட்டிடத் தொகுதி மிகச் சிறந்த அமைவிடம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. துறைமுக நகரம் கைக்கு எட்டிய தூரத்தில் காணப்படுகின்ற அதேவேளை, உள்-நகர மேற்புற அதிவேக நெடுஞ்சாலை ஒரு கிலோமீற்றர் தூரத்திலேயே இருக்கின்றமையால் ‘மரினா ஸ்குயார்’ உண்மையிலேயே நாளைய கொழும்பின் இதயம் போன்ற கேந்திர பகுதியில் அமைந்துள்ளது.

இச் செயல் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2108ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், 2022ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2022ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டில் இருந்து 2023ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு வரையான காலப்பகுதிக்குள் இதிலுள்ள குடிமனைத் தொகுதிகளை வீட்டுரிமையாளர்களுக்கு கையளிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...