அமெரிக்க மற்றும் ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு | தினகரன்

அமெரிக்க மற்றும் ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

அமெரிக்க மற்றும் ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு-Ambassador of USA and Japa Visit Gotabaya Rajapaksa

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் (Alaina Teplitz) இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

அமெரிக்க மற்றும் ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு-Ambassador of USA and Japa Visit Gotabaya Rajapaksa

அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் மார்ட்டின் கெலீ (Martin Kelly), அரசியல் செயற்பாடுகளுக்கான தலைவர் என்டனி ரென்சுலி (Anthony Renzulli) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன், இருதரப்பினரும் இதன்போது சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதனிடையே இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியாமா அகிரா (Sugiyama Akira) இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அமெரிக்க மற்றும் ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு-Ambassador of USA and Japa Visit Gotabaya Rajapaksa

இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் டொஷிஹிரோ கிதமுரா (Toshihiro Kithamura), பிரதி செயலாளர் தகேஷி ஒஷகி (Takeshi Ozaki) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Add new comment

Or log in with...