கொரியமொழி பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின | தினகரன்


கொரியமொழி பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

2019ஆம் ஆண்டில் இடம்பெற்ற கொரியமொழி பரீட்சை பெறுபேறுகள் இன்று (22) வெளியாகியுள்ளன.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளமான www.slbfe.lk இல் இதன் முடிவுகளை பார்வையிட முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இப்பரீட்சை 2019ஆம் ஆண்டு மே 28ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் 08ஆம் திகதி வரை நடைபெற்றதோடு, உற்பத்தி, கட்டுமானம் மற்றும் மீன்வளத் துறைகளில் ஒன்லைன்மூலம் பரீட்சை நடைபெற்றது.

இப்பரீட்சைக்காக 3,319 பேர் தோற்றிய நிலையில், 2,411 பேர் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளனர்.

 


Add new comment

Or log in with...