ராஜிதவால் மீதப்படுத்தப்பட்ட ரூ. 6 இலட்சம் எரிபொருள் கூப்பன்கள் | தினகரன்


ராஜிதவால் மீதப்படுத்தப்பட்ட ரூ. 6 இலட்சம் எரிபொருள் கூப்பன்கள்

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு அரசாங்கத்திடமிருந்து வழங்கப்பட்ட எரிபொருள் கூப்பன்களில் மீதப்படுத்தப்பட்டுள்ள சுமார் 6இலட்சம் ரூபா பெறுமதியான கூப்பன்களை அரசாங்கத்திடம் மீள கையளித்துள்ளார்.

ராஜித சேனாரத்ன நேற்று அவரது அமைச்சில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவிடம் எரிபொருள் கூப்பனை கையளித்தார்.

இந் நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சுகாதார அமைச்சு உலகின் நற்பெயருக்கு இலக்கான சிறந்த அமைச்சாக இயங்கி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கியது.

நான் சுகாதார அமைச்சரான பின் 73 மருந்துகளுக்கான விலைகளைக் குறைத்துள்ளேன். இலவசமாக கண் வில்லைகளை வழங்கினோம். தம்மால் ஆரம்பிக்கப்பட்ட நடமாடும் சுகாதார சேவையில் பெரும் பயன்கள் மக்களுக்குக் கிடைத்தது என்றார். (ஸ)


Add new comment

Or log in with...