வருடாந்த கிரிக்கெட் போட்டி | தினகரன்


வருடாந்த கிரிக்கெட் போட்டி

கொழும்பில் உள்ள இராஜதந்திர அலுவலகங்கள் மற்றும் ஐ.நா. முகவர் நிறுவனங்கள் இணைந்து ஒழுங்கு செய்துள்ள வருடாந்த கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 24ம் திகதி கொழும்பு மலாய் கிரிக்கெட் மைதானத்தில் காலை 8.00 மணி முதல் நடைபெறும்.இப்போட்டியில் இராஜதந்திர அலுவலக சகல உள்ளூர் ஊழியர்கள் மற்றும் இராஜதந்திர ஊழியர்களும் பங்கேற்க முடியும்.

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் சுமார் 70 நபர்கள் மிகவும் வெற்றிகரமான போட்டிகளில் பங்கேற்றனர். இறுதி போட்டியில் ஐரோப்பா அணி வெற்றிபெற்றனர் என ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் தென்னாப்பிரிக்க உயர் ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த எம்.எஸ்.எம். சிராஜ்.தெரிவித்தார்.

இப்போட்டியில் இந்தியா குழு 1, இந்தியா குழு 2, கொரியா, கனடா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, ஆசியான் குழு 1, ஐரோப்பா, ஐஓஎம், யுஎன்டிபி, யுஎன்ஓபி, டபிள்யூஎச்ஓ, ஆசியான் குழு 2, ஏடிபி மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் ஆகிய அணிகள் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்

போட்டியில் பிரதான அனுசரணயாளர் ஸ்டாபோர்ட் மோட்டார் கம்பெனி பிரைவேட் லிமிடெட். நிர்வாக பணிப்பளார் டாக்டர் காலிங்க கல்பெரும ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் எம்.எஸ்.எம். சிராஜிடம். அனுசரணையை கையளிப்பதையும், பணிப்பாளர்கள் தரிந்திர கலுபெருமா, தமிதா ஜெயசுந்திர, பொது முகாமையாளர் சாரக பெரேரா மற்றும் புத்திம இஷார ஆகியோர் கலந்துகொண்டனர்.

ருசைக் பாரூக்


Add new comment

Or log in with...