கொக்கைன் உருண்டை வெடித்ததால் கென்ய பெண் கவலைக்கிடம் | தினகரன்


கொக்கைன் உருண்டை வெடித்ததால் கென்ய பெண் கவலைக்கிடம்

கொக்கெயின் போதைப் பொருளை பிளாஸ்டிக் உருண்டைகளாக்கி விழுங்கி இலங்கைக்கு கடத்தி வந்த கென்ய நாட்டு பெண்ணின் வயிற்றுக்குள் அவ் உருண்டைகள் வெடித்ததால் அந்த யுவதி தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக நீர்கொழும்பு ​வைத்தியசாலை தெரிவிக்கிறது.

சுமார் 51கொக்கெயின் போதைப் பொருளை உருண்டைகளாக்கி விழுங்கியும் பயணப் பொதியில் மறைத்தும் கொண்டுவந்த இவர், விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். வயிற்றிலுள்ள போதைப்பொருள் உருண்டைகளை வெளியே எடுப்பதற்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய வயிற்றுக்குள் சில உருண்டைகள் வெடித்துள்ளன. இதனையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் இப் பெண் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 17 ஆம் திகதி கட்டாரிலிருந்து வந்த கென்ய பெண்னே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பெண்ணின் பயணப் பொதியிலிருந்து 30 கொக்கெயின் போதைப்பொருள் உருண்டைகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டன. பின்னர் சந்தேகநபரான இப் பெண் விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.


Add new comment

Or log in with...