புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ பதவிப்பிரமாணம்

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ, சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இலங்கையின் 23ஆவது பிரதமராக அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதோடு, இரு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, இரண்டாவது தடவையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இன்று (21) பிற்பகல் 3.00 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்து.

இந்நிகழ்வில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...