அரச ஊழியர்களின் வெளிநாட்டு பயணம் தற்காலிக இடைநிறுத்தம் | தினகரன்


அரச ஊழியர்களின் வெளிநாட்டு பயணம் தற்காலிக இடைநிறுத்தம்

அனைத்து அரச ஊழியர்களினதும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் உத்தரவின் பேரில், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவினால் இது தொடர்பான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரட்ணசிறி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அமைச்சுகள், மாகாண மற்றும் ஆளுநர்களின்  செயலாளர்களுக்கு இது தொடர்பான கடிதம்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


Add new comment

Or log in with...