குடும்ப வன்முறைகளுக்கு காரணம் பேஸ்புக் தொடர்புகள் | தினகரன்


குடும்ப வன்முறைகளுக்கு காரணம் பேஸ்புக் தொடர்புகள்

கலவான பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப்  பிரிவுப் பொறுப்பதிகாரி

பேஸ்புக் தொடர்புகளினால் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் நிலையத்துக்கு வரும் முறைப்பாடுகளில் சுமார் 20 வீதமானவை முகநூல் தொடர்புகளினால் ஏற்பட்ட குடும்ப பிரச்சினைகள் என கலவான பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி நேற்று தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தகவல் தருகையில், பொலிஸ் நிலையத்துக்கு வரும் முறைப்பாடுகள் தொடர்பில் செய்யப்பட்ட கருத்துக் கணிப்புகளில் இருந்து இவ்விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டில் பொதுவாக இவ்வாறான பிரச்சினைகளால் குடும்ப வாழ்க்கைகள் சீர்குழைகின்றன. இவ்வாறான பிணக்குகளை பொலிஸார் சமரசமாக தீர்க்க முயற்சிப்பதாகவும், ஒருசில பிரச்சினைகள் குடும்ப வாழ்க்கைக்கு பாதகமாக முடிவடைவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் கைத்தொலைபேசிகளுக்கு வரும் அனாமதேய அழைப்புகளின மூலமாகவும் இந்நிலைமை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பெண்களின் அலட்சிய தன்மைகள் அநாவசியமான பொழுது போக்குகள் காரணமாகவும் இத்தகைய பிணக்குகள் ஏற்படுவதாகவும் இதனால் அப்பாவி பிள்ளைகள் நடுத்தெருவில் விடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

 


Add new comment

Or log in with...