இஸ்ரேலை நோக்கி சிரியாவில் இருந்து ஏவுகணை தாக்குதல் | தினகரன்


இஸ்ரேலை நோக்கி சிரியாவில் இருந்து ஏவுகணை தாக்குதல்

சிரியாவிலிருந்து இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் ஏவப்பட்ட நான்கு ஏவுகணைகளை எங்கள் படைகள் இடை மறித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

“சிரியாவிலிருந்து ஏவப்பட்ட நான்கு ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏவப்பட்ட நான்கு ஏவுகணைகளையும் எங்கள் இராணுவப் படையால் இடை மறித்தோம்” என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இக்குற்றச்சாட்டுக்கு சிரியா தரப்பில் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.

இஸ்ரேல் மீது சிரியா நடத்திய இத்தாக்குதல் காரணமாக சிரியா – இஸ்ரேல் இடையே பதற்ற நிலை உருவாகியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே தீவிரவாதத் தாக்குதல் மற்றும் எல்லைப் பிரச்சினை தொடர்பாக அவ்வப்போது இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் இரு தரப்பும் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்தும் உள்நாட்டுப் போருக்கு ஈரான் முழு ஆதரவு அளித்துள்ளது. மேலும் ஈரான் தனது நாட்டு இராணுவ வீரர்களை சிரிய பாதுகாப்புப் படைக்கு ஆதரவாகச் சண்டையிட அனுப்பி வைத்துள்ளது.

இஸ்ரேலைப் பொறுத்தவரை அந்த நாடு மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானைத் தங்களுக்கான அச்சுறுத்தல் கொண்ட நாடாகக் கருதுகிறது. இதனால் ஈரான் ஆதரவு நிலைப்பட்டைக் கொண்ட சிரியா மீது இஸ்ரேல் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.


Add new comment

Or log in with...