Wednesday, November 20, 2019 - 6:00am
வவுனியா பழைய பேருந்து நிலையில் 2 கிலோ 850 கிராம் கேளரா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார். நேற்று நண்பகலே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற இளைஞன் ஒருவனை வவுனியா பொலிஸார் சோதனை செய்த போதே அதில் கேரளா கஞ்சா காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த 23 வயதுடையவராவர்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைஎடுத்துள்ளனர்.
வவுனியா விசேட நிருபர்
Add new comment