புதுக்குடியிருப்பு, உடையார்கட்டுப் பகுதியில் வெடிமருந்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து 52 கிலோகிராமிற்கும் அதிக வெடிமருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அனுமதிப்பத்திரமின்றி வெடிமருந்து தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று (19) மாலை இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடையார்கட்டுப் பகுதியைச் சேந்த 21 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆங்காங்கே சில இடங்களிலிருந்து தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றிலிருந்து பெறப்பட்ட வெடிமருந்துகளை விற்பனைக்காக வைத்திருந்ததாகவும், இது மீன்களை கொல்பவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்ததாகவும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெடிமருந்து எவ்வகையானது என்பது தொடர்பில் அறியும் பொருட்டு அவற்றை அரசாங்க இராசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சந்தேகநபரை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Add new comment