புதிய ஜனாதிபதிக்கு ஜம்இய்யத்துல் உலமா வாழ்த்து | தினகரன்


புதிய ஜனாதிபதிக்கு ஜம்இய்யத்துல் உலமா வாழ்த்து

நாட்டின் 7ஆவது ஜனாதிபதியை தீர்மானிக்கும் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. இதற்கு உதவியாக இருந்த இந்நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் ஜம்இய்யத்துல் உலமா நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ முபாரக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

தொடர்ந்து அவ்வறிக்கையில், இந்நாட்டு பிரஜைகளின் ஜனநாயக வாக்களிப்பால் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்று இலங்கை சோசலிஷ குடியரசின் 7வது ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். 

மேலும் சாதி,மத வேறுபாடின்றி தான் சேவை செய்யவுள்ளதாக தனது செய்தியில் குறிப்பிட்டார். 

நாட்டின் புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ வுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் அதேநேரம் புதிய ஜனாதிபதி இந்நாட்டை வெற்றியின் பக்கமும் அபிவிருத்தியின் பக்கமும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்பி சுபீட்சத்தின் பக்கமும் கொண்டு செல்வார் என எதிர்பார்க்கின்றோம். 

எனவே, இந்நாட்டு மக்கள் அனைவரும் குறிப்பாக முஸ்லிம்கள் அனைவரும் நாட்டின் அபிவிருத்தி, சமாதானம், சகவாழ்வு, பாதுகாப்பு என்பவற்றை மேம்படச்செய்ய புதிய ஜனாதிபதியோடு கைகோத்து செயற்படுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக்கொள்கிறது. 

அதேநேரம், இந்நாடுஅனைத்துத்துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து சகல இன மக்களும் சமாதானத்துடனும் ஐக்கியத்துடனும் வாழ வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்தனை செய்கின்றது.   


Add new comment

Or log in with...