மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சத்துணவு வெளியில் விற்பனை | தினகரன்


மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சத்துணவு வெளியில் விற்பனை

வைப்பக படம்

பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக கொடுக்கப்படுகின்றன பால் பக்கற் மற்றும் சத்துணவு என்பன மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவ் உணவுகள் மாணவர்களுக்கு வழங்காது வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பெற்றோர்கள் கூறுகையில்,

கிளிநொச்சியிலுள்ள பிரபலமான பாடசாலை ஒன்றின் நிர்வாகத்தினால் மாணவர்களுக்கு வழங்குங்கள் என உதவி அமைப்புகளினால் வழங்கப்பட்ட பால் பைக்கற்றுகளை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பாடசாலை நிதியில் பதிவு செய்கின்றனர். கிளிநொச்சியில் மாணவர்களின் போஷாக்கு பாதிப்படைந்துள்ள நிலையிலேயே உதவி அமைப்புக்கள் இலவசமாக சத்துணவுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் அவற்றை விற்பனை செய்வது குற்றமாகும். இந் நிலையில் இது தொடர்பாக பெற்றோர்கள் பலர் வலயக் கல்வி அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முல்லைத்தீவு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...