யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டெங்கு நோய்க்கு உள்ளான குறித்த மாணவி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று(19) உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சுன்னாகம் உடுவிலை சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி (09) எனும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 16ஆம் திகதி காய்ச்சல் காரணமாக சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவர் டெங்கு நோய்க்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டு 03 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.
(யாழ்.விசேட நிருபர்- மயூரப்பிரியன்)
Add new comment