இன்று முதல் இடைக்கால அரசு? | தினகரன்


இன்று முதல் இடைக்கால அரசு?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவி விலகவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், இன்று முதல் இடைக்கால அரசாங்கமொன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்குமென்று தகவல்கள் தெரிவித்தன.

பிரதமரின் பதவி விலகலையடுத்து சுமார் 15பேரைக் கொண்ட அமைச்சரவையொன்று பதவியேற்கவிருப்பதாகவும் பொதுத் தேர்தல் நடைபெறும் வரை இது செயற்படும் என்றும் தெரியவருகிறது.

2020 மார்ச் மாதம் 01ஆம் திகதியின் பின்னரே பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...