நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக பேருவளை நகர சபை உப தலைவர் முனவ்வர் றபாய்தீன் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அச்செய்தியில், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக நாம் எம்மால் முடியுமான சகல முயற்சிகளையும் செய்தோம்.
எம்மோடு இணைந்து இந்த பணியில் கைகோர்த்து செயல்பட்ட, வாக்களித்த அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி கூர்வதுடன், களுத்துறை மாவட்டத்தில் 08 தேர்தல் தொகுதியிலும் உள்ள மக்கள் புதிய ஜனாதிபதியின் மீது நம்பிக்ைக வைத்து அதிக வாக்குகளை வழங்கி வெற்றியடையச் செய்திருப்பது எமது செயல்பாடுகளின் பலனையும், மக்கள் எம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது.
புதிய ஜனாதிபதி இலங்கையின் சகல இன, மத மக்களையும் சிறந்த முறையில் வழிநடாத்தி எமது தாய் நாட்டை ஆசியாவிலே சிறந்த நாடாக அபிவிருத்தியடையச் செய்வார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அந்த வகையில் கட்சி, இனம் வேறுபாடு அனைத்தையும் மறந்து ஜனாதிபதி முன்னெடுக்கவுள்ள நல்ல திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது காலத்தின் தேவையாகுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Add new comment