கடந்த ஜனாதிபதி தேர்தல்; சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான போட்டியே | தினகரன்


கடந்த ஜனாதிபதி தேர்தல்; சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான போட்டியே

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலானது சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே ஆன போட்டியாகும் என உலமாக் கட்சியின் தலைவர் முபாற‌க் அப்துல் மஜீத்  தெரிவித்தார். 

புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி தொடர்பாக பரப்பப்படும் விமர்சனங்கள் குறித்து தெளிவுபடுத்தும் முகமாக கல்முனையில் அமைந்துள்ள முஸ்லிம் உலமாக் கட்சியின் தலைவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பநேற்றுமுன்தினம்(18)  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவானதை அடுத்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பங்காளி கட்சி என்ற வகையில் முஸ்லிம் உலமா கட்சி தனது பாராட்டுக்களையு வாழ்த்துக்களையும் தெரிவித்தது. புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிகளை ஏற்றுக்கொண்டதன் பின்ன அரச அலுவலகங்களில் ஜனாதிபதியினதோ பிரதமரினதோ அல்லது அமைச்சர்களது புகைப்படங்கள் காட்சிப்படுத்த கூடாது என்றும் அரச இலட்சினைகள் மாத்திரம் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என கூறியது வளம்மிக்க எதிர்காலத்திற்கான ஒரு முன்னுதாரணமே ஆகும். 

தேர்தல் முடிவுகள் வந்த நிலையில்  சிறுபான்மை சமூகங்களை காட்டி கொடுத்த பெருமை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பவற்றையே சாரும். 

அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசிய கட்சியின் ஏஜன்ட் ஆக செயற்படுகின்றார். 2005 ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறிவிட்டு 2006 ல் அமைச்சுப்பதவிக்காக எதிரணியுடன் கைகோர்த்தார். இவரால் தான் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் சந்தர்ப்பவாதிகளாக சர்வதேசத்தில் பார்க்கப்படுகின்றனர். இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தவிர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்ததுடன், சிறுபான்மை மக்களை ஏமாற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளால் தான் தமிழ், முஸ்லிம் மக்கள் பிழையாக வழிநடாத்தப்பட்டு, பிழையான முடிவை எடுத்தார்கள், தமிழ், முஸ்லிம் மக்களை பிரித்து காட்டிக்கொடுத்து விட்டு இன்று அரசுடன் இணைய முயல்கின்றார்கள் என தெரிவித்தார். 

பாறுக் ஷிஹான்  


Add new comment

Or log in with...