2019 இறுதிக்குள் OPPO Qualcomm Dual-Mode 5G ஸ்மார்ட்போன் | தினகரன்


2019 இறுதிக்குள் OPPO Qualcomm Dual-Mode 5G ஸ்மார்ட்போன்

2019 இறுதிக்குள் OPPO Qualcomm Dual-Mode 5G ஸ்மார்ட்போன்-OPPO to Launch Qualcomm-Powered Dual-Mode 5G Smartphone by the end of 2019
குவால்கொம் 5G உச்சி மாநாட்டில் OPPO இன் பிரதான 5G விஞ்ஞானி ஹென்றி டேங்

உலகளாவிய முன்னணி ஸ்மார்ட் சாதன தரக்குறியீடான OPPO, இவ்வாண்டின் இறுதிக்குள் இரட்டை பயன்முறை (dual-mode) 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. பார்சிலோனாவில் நடைபெற்ற குவால்கொம் 5G உச்சி மாநாடு 2019 இல் OPPO இன் பிரதான 5G விஞ்ஞானியான ஹென்றி டேங் (Henry Tang) இதனை அறிவித்திருந்தார். புதிய சாதனம் குவால்கொமின் இரட்டை பயன்முறை 5G மொபைல் தளத்தில் இயக்கப்படுகின்றதும் தனித்து இயங்கும் (Standalone-SA) மற்றும் தனித்தியங்காத (NSA) வலையமைப்புகள் இரண்டுடனும் ஒத்திசையக்கூடியது. 

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் R&D கொள்கைகளுடனான 5G உச்சி மாநாட்டில் OPPO ஐ பிரதிநிதித்துவப்படுத்திய டேங், தற்போதைய 5G இன் நிலை மற்றும் எதிர்கால தயாரிப்புகள், மென்பொருள்கள் மற்றும் அடுத்தகட்ட அனுபவங்களால் செயல்படுத்தப்படவுள்ள அதிநவீன அனுபவங்கள் குறித்தான தனது கருத்துகளைப் டேங் பகிர்ந்து கொண்டார். 5G ஸ்மார்ட்போன்களுக்கு மாறுவதற்கான விளிம்பில் மக்கள் உள்ளதாக டேங் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார், அத்துடன் இது தொடர்பான புதிய சந்தை வாய்ப்புகளை OPPO உணர்ந்துள்ளதாகவும், உலகளவில் அதன் 5G தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளின் வலுவான போட்டி மிக்க வாய்ப்புகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

"OPPO மற்றும் பிற தொழில்துறையாளர்களின் அயராத முயற்சிகள் 5G ஐ விரைவாக ஏற்றுக்கொள்வதற்கு வழி வகுத்துள்ளன. ஒரு சில நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பயனர்கள் ஏற்கனவே OPPO இன் 5G ஸ்மார்ட்போன்களை ஏற்கனவே பயன்படுத்துபவர்களாக மாறிவிட்டனர்" என்று டேங் கூறினார். "எங்கள் அடுத்த தலைமுறை இரட்டை பயன்முறை 5G வாய்ப்புள் உலகளவில் அதிக சந்தைகளில் அதிக நுகர்வோருக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று நம்புகிறோம், இது உலகளவில் பரந்த நுகர்வோர் தளத்திற்கு 5G இனை உடனடியாக கிடைக்கச் செய்யும்."

மே 2019 இல், சுவிட்சர்லாந்தின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான சுவிஸ்கொமுடன் (Swisscom) OPPO இணைந்து OPPO ரெனோ 5G இனை சுவிஸ் சந்தையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியதன் மூலம் ஐரோப்பாவில் வர்த்தக ரீதியாக கிடைக்கக்கூடிய முதல் 5G கையடக்க தொலைபேசியாக அது திகழ்கின்றது. உலகளவில் 5G இன் வணிகமயமாக்கலை துரிதப்படுத்த OPPO தற்போது உலகளாவிய பல வலையமைப்புகளுடன் மும்முரமாக செயல்பட்டு வருவதாக டேங் கூறினார். தொடர்ந்தும் முன்னோக்கிச் சென்று, OPPO தொடர்ந்து 5G தயாரிப்புகளை அதன் உலகளாவிய சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்.

5G சாதன வளர்ச்சி மற்றும் அதனை ஆதரிக்கும் ஒரு முன்னோடியான  OPPO, தரநிலைப்படுத்தல், மென்பொருள் மற்றும் 5G தொழில்நுட்பங்கள் தொடர்பான பிற தொழில்நுட்ப அம்சங்களில் விரிவான நிபுணத்துவத்தை உருவாக்கியுள்ளது. 2015 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட OPPO இன் 5G R&D குழு, அடுத்த தலைமுறை மொபைல் தொழில்நுட்பத்திற்கான தரநிலைகளை அமைப்பதில் மிக மும்முரமாக பங்களித்து வருகிறது. செப்டம்பர் 2019 நிலவரப்படி, OPPO 2,500 க்கும் மேற்பட்ட உலகளாவிய காப்புரிமை குழுமங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்து, 5G தரநிலை அத்தியாவசிய காப்புரிமையின் 1,000 இற்கும் மேற்பட்ட குழுமங்களை ஐரோப்பிய தொலைத்தொடர்பு தர நிர்ணய நிறுவனத்தில் (ETSI) பதிவு செய்துள்ளது. இது தவிர, 3GPP இற்கு 3,000 5G தரநிலைகள் தொடர்பான ஆவணங்களை OPPO சமர்ப்பித்துள்ளதன் மூலம் சர்வதேச தர அமைப்புக்கு, சிறந்த பங்களிப்பாளர்களின் தரவரிசையில் உயர்ந்த பட்டியலிலுள்ளது.

OPPO பற்றி
வளர்ந்து வரும் உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான OPPO, கடந்த பத்து ஆண்டுகளாக நுகர்வோர் நடத்தை மற்றும் அபிலாஷைகளைப் பற்றிய ஆழமான நுண்ணறிவுக்கு ஏற்ப தொழில்நுட்ப முன்னேற்றங்களை மையமாகக் கொண்ட புதுமையான தொழில்நுட்பம், நுணுக்கமான வடிவமைப்பு மற்றும் கெமரா நிபுணத்துவம் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசாதாரண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மொபைல் துறையில் சுழலும் கெமரா, அல்ட்ரா எச்டி அம்சம் மற்றும் 5 x டுவல் கெமரா Zoom தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை,  மொபைல் துறையில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட பல ஸ்மார்ட் கண்டுபிடிப்புகளில் அறிமுகப்படுத்திய முதல் வர்த்தக நாமம் OPPO ஆகும்.
2016 ஆம் ஆண்டில் செல்பி-மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, OPPO புதிய தொழில்நுட்பம் மற்றும் அதன் நுண்ணறிவு பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அதன் எல்லைகளை விரிவுபடுத்துகிறது. அதன் பல மாதிரிகள் மற்றும் வரம்புகள் மூலம் ஏராளமான வடிவமைப்புகள் மூலம் நுகர்வோர் அனைவரையும் அவர்களிடம் உருவாகி வரும் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது.
200 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோர் OPPO ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர், OPPO இன் வர்த்தகம் 35 நாடுகளையும் பிராந்தியங்களையும் உள்ளடக்கியதாகும். 400,000 இற்கும் மேற்பட்ட காட்சியறைகளைக் கொண்டுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் 4 ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ளது. அதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிறந்த ஸ்மார்ட்போன் புகைப்பட அனுபவத்தை வழங்கி வருகிறது.


Add new comment

Or log in with...