உதட்டினை பாதுகாக்கும் முறை | தினகரன்


உதட்டினை பாதுகாக்கும் முறை

உதடுகளை கருமையின்றி, சுருக்கமின்றி வைத்துக்கொள்ள பெண்கள் முயல வேண்டும். அவ்வகையில்,  உதடுகளை கருமையின்றி வைத்துக்கொள்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.

பெண்கள் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள். அழகு, அலங்காரம் போன்ற விடயங்களில் பெண்கள் தனிக்கவனம் செலுத்துவதுண்டு. அப்படி அதீத முயற்சிகள் செய்து அழகான தோற்றத்தை பெற முயற்சி செய்கையில், பெண்கள் மறக்கும் முக்கிய விடயம்உதடுகள். உதடுகளை கருமையின்றி, சுருக்கம் இன்றி வைத்துக்கொள்ள பெண்கள் முயல வேண்டும்; ஏனெனில் உங்கள் முகத்தின் அழகினை நிர்ணயிப்பதில் உதடுகள் முக்கிய பங்காற்றுகின்றன. அவ்வகையில், உதடுகளை கருமையின்றி வைத்துக்கொள்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.

* எலுமிச்சை சாறினில், ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து உதட்டினில் தடவவும். பின் 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். தினமும் இவ்வாறு செய்வது உதட்டின் கருமையை நீக்க உதவும்.

* யோகார்டிலுள்ள லாக்டிக் அமிலம் கருமையை அகற்றும் சக்தி வாய்ந்தது. தினமும் யோகார்ட்டை உதட்டில் தடவலாம். யோகார்ட் இல்லையெனில், தயிர் உபயோகிக்கலாம்.

* தக்காளி துண்டை எடுத்து உதட்டை சுற்றிலும் உள்ள கருமை மீது தடவி வந்தால், அது கருமையை நீக்க உதவும். மேலும் இது உதட்டிற்கு ஈரப்பதம் அளிக்கும்..!

* உருளைத்துண்டு மற்றும் வெள்ளரி சாறெடுத்து உதட்டின் மீது தினசரி தடவவும்; இது உதட்டிற்கு ஈரப்பதம் அளித்து, கரிய உதட்டினை சிவப்பாக்கும்..!

* உதட்டின் ஈரப்பதம் குறைந்தால், கருமை ஏற்படுகிறது. எனவே, அதன் கருமையை போக்க தினமும் வெண்ணெய் தடவவும். அதுபோல், ஒலிவ் மற்றும் பாதாம் எண்ணெயும் உதட்டிற்கு ஈரப்பதத்தை அளித்து, மென்மையாக்கி, கருமையை நீக்கும்.

* ரோஸ் வாட்டர் உதட்டின் கருமையைப் போக்க சிறந்தது. இந்நீரை சிறிது பஞ்சில் நனைத்து உதட்டைச் சுற்றிலும், தினமும் இரவு படுக்கச் செல்லுமுன் தடவவும், இது உதட்டின் கருமையை நீக்கி, உதட்டினை சிவப்பாக்கும்.


Add new comment

Or log in with...