சிங்கி இறால்களுடன் இருவர் கைது | தினகரன்


சிங்கி இறால்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் சிங்கி இறால் பிடித்த குற்றச்சாட்டில் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, காலி முகத்திடலுக்கு அண்மித்த கடற்பரப்பில் வழமையான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு கடற்படை கட்டளைப் பிரிவினரினால், குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செல்லுபடியாக கூடிய அனுமதிப்பத்திரமின்றி சிங்கி இறால் பிடித்த குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக,  கடற்படையினர் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர்களிடமிருந்து டிங்கி படகொன்று, ஒரு என்ஜின் மற்றும் 07 சிங்கி இறால்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தெஹிவளை மற்றும் இரத்மலானையைச் சேர்ந்த 23 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள மீன்பிடி உபகரணங்கள் மற்றும் சிங்கி இறால்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.  

 

 


Add new comment

Or log in with...