கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சஜித் பிரேமதாஸ வாழ்த்து | தினகரன்


கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சஜித் பிரேமதாஸ வாழ்த்து

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சஜித் பிரேமதாஸ வாழ்த்து-Sajith Premadasa Wishes Gotabaya Rajapaka

ஐ.தே.க. உப பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு

ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதற்கு, புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர் இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தலுக்கு பிந்தைய காலத்தில் தனது ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோட்டாபய ராஜபக்ஷவிடம் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்கள் ஆணைக்கு கட்டுப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக பதவி விலகுவதாகவும், சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தன்னை ஜனாதிபதி பதவியில் நியமிக்க ஆதரவளித்தோர், தனக்காக முன்னின்றோர் உள்ளிட்ட அனைவருடனும் தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து எதிர்வரும் வாரங்களில், கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது 26 வருட அரசியல் வாழ்க்கை மற்றும் தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...