மணிக்கு 1,010 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்த கார் | தினகரன்


மணிக்கு 1,010 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்த கார்

பிரிட்டனைச் சேர்ந்த பிளட்ஹவுண்ட் எனும் கார் மணிக்கு 1,010 கிலோமீற்றர் வேகத்தில் ஓடி புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

உலக வரலாற்றில் நிலத்தில் ஓடும் கார்களில் மணிக்கு 965 கிலோமீற்றர் வேகத்தை தாண்டிய ஏழாவது கார் எனும் சிறப்பை இந்த கார் பெற்றுள்ளது.

தற்போது ஜெட் இஞ்சினை பயன்படுத்தி சாதனையை நிகழ்த்தியுள்ள இந்த காரில், ரொக்கெட் இஞ்சினைக் கூட பொருத்த முடியும்.

அவ்வாறு, ரொக்கெட் இஞ்சினை பொருத்தி அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள சோதனையில், தற்போதைய உலக சாதனையாக இருக்கும் மணிக்கு 1,228 கிலோமீற்றர் வேகத்தை இந்த கார் எளிதில் விஞ்சிவிடும் என்று கருதப்படுகிறது.


Add new comment

Or log in with...