எரிவாயு குழாய் வெடித்ததில் பங்களாதேஷில் எழுவர் பலி | தினகரன்


எரிவாயு குழாய் வெடித்ததில் பங்களாதேஷில் எழுவர் பலி

பங்களாதேஷ் துறைமுக நகரான சிட்டகோனில் எரிவாயு குழாய் வெடித்து குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதோடு மேலும் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.

ஐந்து மாடிக் கட்டடம் ஒன்றுக்கு அருகில் நேற்று ஏற்பட்ட இந்த விபத்தில் அந்த கட்டடத்தின் சுவர்களும் இடிந்து விழுந்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பலரும் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அச்சுறுத்தல் உள்ளது.

இந்த வெடிப்புக்கான காரணம் என்னவென்று கண்டுபிடிக்கப்படாத நிலையில் அது குறித்து விசாரணைகள் நடத்தப்படுவதாக தீயணைப்புச் சேவை அதிகாரி ஆமிர் ஹுஸைன் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...