வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டதால் தாக்குதல் | தினகரன்


வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டதால் தாக்குதல்

வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டதால் தாக்குதல்-Fighting 3 Injured Puttalam-Wanathawilluwa

வைத்தியசாலைக்கு சென்றவர்களை பின்தொடர்ந்து தாக்குதல்; ஒருவர் கைது

புத்தளம், வனாத்தவில்லு பிரதேசத்தில் வாகனமொன்றிற்கு சேதம் ஏற்பட்டதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (17) பிற்பகல் 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகனமொன்றிற்கு சேதம் ஏற்பட்டமை தொடர்பிலான பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக வந்த இரு சாராருக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக, புத்தளம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இத்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மூவரும் புத்தளம் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து வந்த குறித்த குழுவினர் அவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில், புத்தளம், மேற்கு உப்பளத்தைச் சேர்ந்த 27 வயதான, எம்.ஏ. அலி, பாடசாலை வீதி, தில்லையடியைச் சேர்ந்த 36 வயதான, எஸ்.எம்.எல். அசாத், அல்ஹசனாத் வீதியைச் சேர்ந்த 33 வயதான, எஸ்.எம்.எம்.எப். அப்தாத் ஆகிய மூவரே காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பில் புத்தளம், கோட்டை வீதியைச் சேர்ந்த எஸ்.என்.எம். நபீர் என்பவரை புத்தளம் பெலிஸார் கைது செய்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...