INSEE சீமெந்து: இலங்கையின் நிர்மாணத்துறையின் ஊக்குவிப்புக்கு புதிய i2i | தினகரன்


INSEE சீமெந்து: இலங்கையின் நிர்மாணத்துறையின் ஊக்குவிப்புக்கு புதிய i2i

நாட்டின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து, தேசிய நிர்மாணத் துறையை மேம்படுத்தும் நோக்கில் திறந்த i2i கைகோர்ப்பை அறிமுகம் செய்துள்ளது.

உள்நாட்டு துறைசார் செயற்பாடுகளை மேம்படுத்தி, நியமப்படுத்த வேண்டிய தேவையை உணர்ந்த INSEE சீமெந்து, புத்தாக்கமான வினைத்திறன் வாய்ந்த தீர்வுகளை உயர்தரம் வாய்ந்த பிளென்டட் சீமெந்து தெரிவை அறிமுகம் செய்திருந்தது. கொள்கை வடிவமைப்பு முதல் பூர்த்தி செய்தல் வரை மொத்தம் 18 மாத காலப்பகுதியை இத்திட்டம் கொண்டிருந்தது.

INSEE சீமெந்தின் வணிக மற்றும் புத்தாக்க பணிப்பாளர் ஜான் குனிக் கருத்துத் தெரிவிக்கையில்,கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு வாய்ந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சந்தை முன்னோடியாகத் திகழும் இந்நிறுவனம், புதிய கொள்கைகள், புத்தாக்கம் மற்றும் சிறந்த செயன்முறைகளை பகிர்வதற்கு அவசியமான அறிவூட்டும் பயிற்சிகளை வழங்கியிருந்தது. துறைசார் பங்காளர்களான இளம் கல்விமான்கள், வடிவமைப்பாளர்கள்,பொறியியலாளர்கள், மேசன்மார், நிர்மாண செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மற்றும் போட்டியாளர்கள் என பலரையும் உள்ளடக்கியிருந்தது. அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,துறையைச் சேர்ந்த அனைவருக்கும் திறந்த ஒன்றிணைந்த நிலையில் செயலாற்றுவதற்கு பொருத்தமான வகையில் எமது i2i நடவடிக்கை அமைந்துள்ளது. புத்தாக்கமான கொங்கிறீற் மற்றும் சீமெந்து தயாரிப்புகளை வடிவமைப்பது, பகிர்வது, பயில்வது மற்றும் பரிசோதிப்பது போன்றவற்றுக்கு அவர்கள் இதனை பயன்படுத்தமுடியும் என்றார்.


Add new comment

Or log in with...