சிங்கர், Sony உற்பத்திகளுக்கான வர்த்தகநாமத் தூதுவர்களாக மீண்டும் பாத்திய, சந்தூஷ் | தினகரன்


சிங்கர், Sony உற்பத்திகளுக்கான வர்த்தகநாமத் தூதுவர்களாக மீண்டும் பாத்திய, சந்தூஷ்

நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையில் நாட்டில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, Sony International (Singapore) Ltd இன் இலங்கை பிரதிநிதித்துவ அலுவலகத்துடன் இணைந்து, நாட்டில் Sony உற்பத்திகளுக்கான வர்த்தகநாமத் தூதுவர்களாக பாத்திய மற்றும் சந்தூஷ் ஆகியோரின் நியமனத்தை மீளவும் புதுப்பித்துக் கொண்டுள்ளன.

சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மகேஷ் விஜேவர்த்தன, சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சியின் சந்தைப்படுத்தல் துறை பணிப்பாளரான குமார் சமரசிங்க, மற்றும் உச்ச நட்சத்திர ஜோடியான பாத்திய ஜெயக்கொடி மற்றும் சந்தூஷ் வீரமன் ஆகியோருக்கிடையில் இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில் இந்த கைச்சாத்து இடப்பட்டுள்ளது.

சிங்கர் கூட்டாண்மை நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மகேஷ் விஜேவர்த்தன, சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சியின் சந்தைப்படுத்தல் துறை பணிப்பாளரான குமார் சமரசிங்க, சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சியின் சந்தைப்படுத்தல் துறை முகாமையாளரான பியும் ஜெயதிலக, ளுழலெ இலங்கை பிரதிநிதித்துவ கிளை அலுவலகத்தின் தலைமை அதிகாரியான ஜஸ்டின் வொங், RMDC Sony International (Singapore) Ltd இன் தலைமை அதிகாரியான அட்சுஷி என்டோ, RMDC Sony International (Singapore) Ltd இன் சந்தை அபிவிருத்தி முகாமையாளரான ஜொசுவா குவெக், Sony International (Singapore) Ltd இன் இலங்கைப் பிரதிநிதித்துவ அலுவலகத்தின் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரியான டில்ஷான் கம்மம்பில, சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சியின் வர்த்தகநாம முகாமையாளரான தாரக வர்ணகுலசூரிய ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். பாத்திய மற்றும் சந்தூஷ் ஆகியோர் கடந்த ஆண்டில் Sony உற்பத்திகளுக்கான வர்த்தகநாமத் தூதுவர்களாக நியமிக்கப்பட்ட பின்னர் Sony உற்பத்திகளின் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சிங்கர் அடையப்பெற்றுள்ளதுடன், Sony வர்த்தகநாமத்தை பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதில் இந்த இசை இரட்டையர்கள் மூலகாரணமாகத் திகழ்ந்துள்ளனர்.


Add new comment

Or log in with...