தகவல் தொழில்நுட்ப சிறப்புக்காக MBSLக்கு மெரிட் விருது | தினகரன்


தகவல் தொழில்நுட்ப சிறப்புக்காக MBSLக்கு மெரிட் விருது

நிதிச் சேவைகளை வழங்குவதில் முன்னணி நிபுணராக திகழும் மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ், NBQSA 2019 விருதுகள் வழங்கும் நிகழ்வில் மெரிட் விருதை சுவீகரித்திருந்து. MBSLஇன் உள்ளக மென்பொருள் தயாரிப்பான "Velocity Bank Reconciliation” என்பதற்கு 'In-house Application' பிரிவில் இந்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விருதுகள் - NBQSA 2019 போட்டி, இலங்கையின் பிரிட்டிஷ் கணினி சங்கம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பட்டய கல்வியகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் பதிவாகியிருந்த சிறந்த சாதனைகளை கெளரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகின்றது. மேலும், NBQSA 2019 இல் MBSL இன் உள்ளக மென்பொருளான “Velocity” க்கு தொடர்ச்சியான இரண்டாவது வருடமாகவும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2018 இல் APICTA இனால் “Velocity” க்கு Business Services (HC-BS) சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது.

இந்த சாதனை தொடர்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைமை அதிகாரி விதானாச்சி கருத்துத் தெரிவிக்கையில், தகவல் தொழில்நுட்பத்தில் பெருமளவு முதலீட்டுடன், புத்தாக்கமான அபிவிருத்தி செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கின்றோம். இதனூடாக, உள்ளக மட்டத்தில் சிறந்த தீர்வுகளை எம்மால் வழங்கக்கூடியதாக இருக்கும்.


Add new comment

Or log in with...