LOT Polish இலங்கைக்கான நேரடி விமான சேவை ஆரம்பம் | தினகரன்


LOT Polish இலங்கைக்கான நேரடி விமான சேவை ஆரம்பம்

வோர்சோவிலிருந்து முதலாவது நேரடி விமான சேவையை ஆரம்பித்த லொட் பொலிஷ் விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்மையில் வந்தடைந்தது. போலந்து மற்றும் ஐரோப்பாவிலிருந்து எமது நாட்டிற்கு வந்த விசேட அதிதிகள், விடுமுறையை திட்டமிடுவோர், ஊடகவியலாளர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் ஆகியோருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விசேட அதிதிகளுக்குள் போலந்து உள்விவகார நடவடிக்கைகளுக்கான அமைச்சர் Maciej Lang இலங்கைக்கான போலாந்து தூதுவர் Adam Burakowski, லொட் பொலிஷ் விமானச் சேவையின் பிரதம வணிக அதிகாரி Michal Fijol மற்றும் நிறுவன பேச்சாளர் Michal Czernicki ஆகியோருடன் போலாந்தின் 2009ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி மற்றும் லொட் பொலிஷ் விமான சேவையின் உதவியாளர் Olga Bulawa ஆகியோர் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் உரையாற்றிய லொட் பொலிஷ் விமான சேவையின் பிரதான வணிக அதிகாரி Michal Fijot, லொட் பொலிஷ் விமான சேவையை நாம் விரிவான சுற்றுலா சேவைக்காக ஆரம்பித்து எமது நாட்டுடன் கைகோர்த்தமையானது மகிழ்யச்சிளிக்கிறது. ஆசியாவிலேயே பார்வையிட வேண்டிய இடமான இலங்கைக்கு வாரத்திற்கு நேரடியான மூன்று சேவைகளை ஏற்பாடு செய்துள்ளதோடு இது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகாிப்பதற்கான ஒரு செயற்பாடாக அமைந்துள்ளது. அத்துடன் இலங்கைப் பிரஜைகளுக்கு போலந்திற்கோ அல்லது வேறெந்தவொரு ஐரோப்பிய நாட்டிற்கோ செளகரியமாக செல்வதற்கு தேவையான சிறந்த வசதிகளை செய்துகொடுப்பதற்கு லொட்பொலிஷ் விமான சேவைகளுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதுஎன தெரிவித்தார்

குளிர்கால சுற்றுலாப் பருவத்தின் தொடக்கத்திற்கான சரியான நேரத்தில் இந்த சேவை ஆரம்பிக்கப்படுவதோடு, எதிர்வரும் 2020 மார்ச் மாதம் முதல் லொட் பொலிஷ் விமான சேவையானது வாரத்திற்கு மூன்று தடவைகள் வோர்சோவிலிருந்து கொழும்புக்கான சேவையை வழங்கவுள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹான் பண்டித்தகே, லொட் பொலிஷின் நேரடி விமான சேவையில் கொழும்புக்கு வந்த குழுவினருக்கு சிறந்த வரவேற்பை வழங்க விரும்புகிறேன் என்றார்.


Add new comment

Or log in with...