80% வாக்குப் பதிவு; தேர்தல் வாக்களிப்பு சுமூகம் | தினகரன்


80% வாக்குப் பதிவு; தேர்தல் வாக்களிப்பு சுமூகம்

80% வாக்குப் பதிவு; தேர்தல் வாக்களிப்பு சுமூகம்-Election Voting Concluded-80percent Voting
(வவுனியாவில் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட செயலகத்திற்கு வாக்கு பெட்டிகள் - படம்: வவுனியா விசேட நிருபர்)

தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் தினகரன் பேஸ்புக் பக்கத்தில்

7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5.00 மணிக்கு நிறைவடைந்தது.

நாடு முழுவதிலுமுள்ள 12,845 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பதற்காக ஒரு கோடியே  59 இலட்சத்து, 92 ஆயிரத்து 96 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

அதற்கமைய நாடு முழுவதிலும் சுமார் 80% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மாலை 5.15 மணியளவில் 1,179 மத்திய நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டு வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடம்பெற்று வருகின்றன.

தபால் வாக்களிப்பு முடிவுகள் முதலில் வெளியிடப்படவுள்ள நிலையில், 371 தபால் மூல வாக்கெண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் தற்போது எண்ணம் பணிகள் இடம்பெற்று வருவதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரசிகா பீரிஸ் தெரிவித்தார்.

அதற்கமைய மொத்தமாக 1,550 வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான வாக்கெண்ணும் நிலையங்களாக 169 வாக்குகள் எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் முதலாவது தேர்தல் முடிவாக, தபால் வாக்கு முடிவுகள் இன்று நள்ளிரவளவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியா தெரிவித்தார்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் தினகரன் பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...