ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் பெருந் தொகையானோர் இலங்கை வரவுள்ளதாக கடந்த காலங்களில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும் கடந்த வருடங்களுடனும், கடந்த மாதங்களுடனும் ஒப்பிடும் போது இவர்களது வருகை பெரும் அதிகரிப்பை காட்டவில்லையென குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தரவுகள் மூலம் தெளிவாகிறது.
2019நவம்பர் 01முதல் 11ஆம் திகதி வரை 39,553பேர் வெளிநாட்டில் வாழும் இலங்கையர் நாட்டுக்குள் வந்துள்ளனர்.
இதேபோன்று 2018ஆம் ஆண்டு நவம்பர் 01முதல் 11ஆம் திகதி வரை 38,325பேர் வந்துள்ளனர்.
2019ஒக்டோபர் மாதம் 01முதல் 11ஆம் திகதி வரை மட்டும் 39,004பேர் இலங்கை வந்துள்ளனர்.
2019நவம்பர் மாதம் 01முதல் 11ஆம் திகதி வரை இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் 809பேர் வந்துள்ளனர். 2018ஆம் ஆண்டிலும் இதே மாதம் இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள 723பேர் இலங்கை வந்துள்ளனர்.
2018ஒப்டோபர் மாதம் இலங்கை வந்த வெளிநாட்டில் வாழும் இலங்கையரின் மொத்த எண்ணிக்கை 1,15,128என பதிவாகியுள்ளது. இதில் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் 2,073என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
2019ஒப்டோபர் மாதம் இலங்கை வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,297ஆகவும், இதில் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் 2,241ஆகும்.
இந்தத் தரவுகளை ஆராயும்போது இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக விசேடமாக இலங்கையரின் வருகையில் அதிகரிப்பு காணப்படவில்லையென்பது தெரிகிறது.
2019நவம்பர் 01முதல் 11வரை
வருகை - 39,553
இரட்டைப் பிரஜாவுரிமை – 809
2018நவம்பர் 01முதல் 11வரை
வருகை - 38,325
இரட்டைப் பிரஜாவுரிமை – 723
2019ஒக்டோபர் 01முதல் 11வரை
வருகை - 39,804
இரட்டைப் பிரஜாவுரிமை – 742
2018ஒக்டோபர் 01முதல் 31வரை
வருகை – 1,15,128
இரட்டைப் பிரஜாவுரிமை – 2,073
2019ஒக்டோபர் 01முதல் 31வரை
வருகை – 1,10,297
இரட்டைப் பிரஜாவுரிமை – 2,346
Add new comment