Friday, April 26, 2024
Home » 3ஆவது தலாய் லாமாவின் திபெத்தின் சுதந்திரப் பிரகடனத்தின் 111ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்

3ஆவது தலாய் லாமாவின் திபெத்தின் சுதந்திரப் பிரகடனத்தின் 111ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்

by Rizwan Segu Mohideen
February 20, 2024 3:29 pm 0 comment

பெப்ரவரி 13 திபெத் மற்றும் திபெத் மக்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது. ஏனெனில் 1913 ஆம் ஆண்டில் திபெத் 13ஆவது தலாய் லாமாவின் ஆட்சியின் கீழ் தனது சுதந்திரத்தை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியது. திபெத்தின் சுதந்திரப் பிரகடனத்தின் 111ஆவது ஆண்டு விழாவை இந்த ஆண்டு கொண்டாடுகிறது.

1950ல் குவோமின்டேங்கை வெளியேற்றி கம்யூனிச சீனா, திபெத்தை ஆக்கிரமிக்கும் வரை திபெத் வரலாற்று ரீதியாக சீனாவின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. திபெத்தின் வரலாறு வெளிப்புற சக்திகள் திபெத்தில் தனது செல்வாக்கைச் செலுத்தின. குறிப்பாக மங்கோலியர்கள், மஞ்சுக்கள் மற்றும் சீனப் பேரரசுகள் அதில் அடங்கும். இருப்பினும், திபெத் இந்த பேரரசுகளில் எதிலும் உத்தியோகபூர்வ அங்கமாக இருந்ததில்லை.

திபெத் ஒரு நவீன தேசிய அரசின் அனைத்து பண்புகளையும் கொண்டிருந்தது.ஒரு தனித்துவமான புவியியல், மக்கள்தொகை, பகிரப்பட்ட அடையாளம் மற்றும் கலாச்சாரம், ஆட்சி முறை மற்றும் இறையாண்மை இவை அனைத்தையும் அந்த நாடு தன்வசம் கொண்டிருந்தது. திபெத் தனிமைப்படுத்தப்பட்டதாலும் வெளிநாட்டு உறவுகள் இல்லாததாலும் திபெத்தை ஒரு இறையாண்மை கொண்ட தேசிய நாடாக சர்வதேச அளவில் அங்கீகரிப்பது மட்டுமே இல்லாதிருந்தது.

13ஆவது தலாய் லாமாவின் உத்தியோகபூர்வ சுதந்திர பிரகடனம் திபெத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

1913-1950 வரை, திபெத் 13ஆவது தலாய் லாமாவின் ஆட்சியின் கீழ் எந்த வெளிநாட்டு செல்வாக்கோ குறுக்கீடும் இல்லாமல் இருந்தது. அவர் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததோடு ஆங்கில மொழிப் பாடசாலைகள், நாணயத்தாள் மற்றும் தபால் தலைகள் என்பவற்றையும் அறிமுகப்படுத்தினார். வெளியுலக உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, திறமையான இளம் திபெத்திய அதிகாரிகள் பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

1914 ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு சிம்லா மாநாட்டில் திபெத்திய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், இதில் சீன மற்றும் பிரிட்டிஷ் இந்திய பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.1933 இல் 13ஆவது தலாய் லாமா மறைந்தார்.

1950 இல் கம்யூனிஸ்ட் சீனா திபெத்தின் மீது படையெடுப்பதற்கு முன்னர் வரை திபெத் அதன் சொந்த இராணுவம், வெளியுறவுத் துறை, நாணயம், கடவுச்சீட்டுகள் என்பன பயன்பாட்டில் இருந்தன. திபெத்திய வர்த்தகக் குழுக்கள் 1948 இல் சீனா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உட்பட பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இத்தாலி, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, சவுதி அரேபியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு திபெத் நாட்டு கடவுச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன.

திபெத்தின் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்பு நடைபெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு, மே மாதத்தில் ஒப்பந்தமொன்றை கையெழுத்திடுவதன் மூலம் சீனா தனது ஆட்சியை சட்டப்பூர்வமாக்க முயற்சித்தது.

கம்யூனிச சீனா திபெத்தின் அடையாளத்தையும், கலாச்சாரத்தையும், சுற்றுச்சூழல் அமைப்பையும் படிப்படியாக அழிக்கத் தொடங்கியது. சீனர்களுக்கு எதிரான கிளர்ச்சி காமில் தொடங்கி திபெத்திய தலைநகர் லாசா வரை பரவியது. இதற்கு எதிரான போராட்டங்கள் நசுக்கப்பட்டன.ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். 1959 இல், தலாய் லாமா மாறுவேடத்தில் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். அவரைப் பின்தொடர்ந்த 80,000 க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் வெளியுறினார்கள்.

உலக வரைபடத்தில் இருந்து திபெத்தை அழித்துவிட்டு, அதற்குப் பதிலாக சீன “ஜிசாங்” என்று பிரச்சாரம் செய்ய சீனா தனது அனைத்து பிரச்சார இயந்திரங்களையும் பயன்படுத்தியது.

திபெத்திய லாமாக்களின் மறுபிறவி கொள்கையிலும் தலையீடு செய்யப்பட்டதோடு மறுபிறவி பற்றிய சட்டங்களை அனைத்து விதிகளுக்கும் அனுமதி பெற வேண்டும் என சீனா அறிவித்தது.

சீனா தனது அண்டை நாடுகளுக்கு மட்டுமல்ல, உலக ஒழுங்கை தனது வசம் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துவதில் ஈடுபட்டுள்ள ஒரு போர்க்குணமிக்க சக்தியாகவும் அச்சுறுத்தலை இன்று உலகம் நன்கு அறிந்திருக்கிறது. (டைம்ஸ் ஒப் இந்தியா)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT