Wednesday, April 24, 2024
Home » 12 வருடங்களுக்கு பின்னர் ஆரம்பிக்கபட்ட ஆரம்ப பிரிவு

12 வருடங்களுக்கு பின்னர் ஆரம்பிக்கபட்ட ஆரம்ப பிரிவு

by Prashahini
February 20, 2024 3:17 pm 0 comment

ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ கெம்பியன் தமிழ் மகா வித்தியாலயத்தில் 12 வருடங்களுக்கு இன்று (20) ஆரம்பபிரிவு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

வித்தியாலயத்தின் அதிபர் தமிழ்வானண் தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ், ஹட்டன் வலையகல்வி பணிப்பாளர் ஆர்.விஜேயந்திரன், நீர்வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பாடல் பிரிவு அதிகாரி தயாளன், நோர்வூட் பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர் பிரபு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியின் சிரேஷ்ட அமைப்பாளர் இளையராஜா, அயல் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேனை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது. 1000 பாடசாலைகள் வேலைத்திட்டத்தின் கீழ் பொகவந்தலாவ கெம்பியன் தமிழ் மகாவித்தியாலயத்தில் இருந்து ஆரம்பபிரிவு நீக்கப்பட்டதன் பின்னர் கெம்பியன் பகுதியில் உள்ள மாணவர்கள் ஆரம்பபிரிவிற்கு கெம்பியன் எல்டொப்ஷ், தமிழ் வித்தியாலயம், சென்விஜயன்ஷ் தமிழ் வித்தியாலயத்திற்கு கல்வி நடவடிக்கைக்கு சென்றதை அடுத்து ஆரம்ப பிரிவிற்கான புதிய கட்டடமொன்றை அமைப்பதற்கு காணிக்கான அனுமதி கடிதம் வழங்கி வைக்கப்பட்டதோடு புதிய கட்டடத்திற்கு 50 இலட்சம் ருபாய் நிதி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர் – எஷ்.சதீஷ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT