வாக்குப் பெட்டிகள், உத்தியோகத்தர்கள் வாக்களிப்பு நிலையங்களை நோக்கி | தினகரன்


வாக்குப் பெட்டிகள், உத்தியோகத்தர்கள் வாக்களிப்பு நிலையங்களை நோக்கி

8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான ஜனாதிபதித் தேர்தல் நாளையதினம் (16) நடைபெறவுள்ளது.

அதற்கமைய, வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை  கொண்டு செல்லும் நடவடிக்கையும் உத்தியோகத்தர்களை அழைத்துச் செல்லும் நடவடிக்கையும் இன்று (15) காலை ஆரம்பமாகியுள்ளன.

நாளை இடம்பெறவுள்ள தேர்தல் கடமைகளில் சுமார் 3 இலட்சம் உத்தியோகத்தர்கள் கடமையில்  ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இத்தேர்தலில்

  • 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
  • மு.ப.  7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ளது.
  • 12,845 வாக்களிப்பு மத்திய நிலையங்கள்
  • ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 (15,992,096) பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
  • வாக்குப்பெட்டிகளின் போக்குவரத்திற்கு கடற்படையினரின் உதவியும் பெறப்பட்டுள்ளது.

Add new comment

Or log in with...