Friday, March 29, 2024
Home » யாழ். இராமநாதன் நுண்கலைப் பீட மாணவர்கள் போராட்டம்

யாழ். இராமநாதன் நுண்கலைப் பீட மாணவர்கள் போராட்டம்

- விரிவுரை செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை

by Prashahini
February 20, 2024 10:23 am 0 comment

யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீட மாணவர்கள் இன்று (20) வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழ இராமநாதன் நுண்கலைப்பீட இசைத்துறையில் 4ஆம் வருடத்தில் கல்விகற்கவேண்டிய 3ஆம் வருட 2ஆம் அரையாண்டு மாணவர்களின் விரிவுரை செயற்பாடுகளை துரிதப்படுத்தக் கோரியே இவ்வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

மாணவர்கள் வாயிற் கதவுகளை மூடி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதோடு விரிவுரையாளர்கள் பணியாளர்கள் உட்செல்லமுடியாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – பிரபாகரன் டிலக்சன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT