சிறுகோளில் துளையிட்ட விண்கலம் திரும்புகிறது | தினகரன்


சிறுகோளில் துளையிட்ட விண்கலம் திரும்புகிறது

பூமியின் அருகிலுள்ள சிறுகோள் ஒன்றை ஆராய்ச்சி செய்ய ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலம் தனது ஆய்வை முடித்துக்கொண்டு பூமியை நோக்கி வந்த வண்ணமுள்ளது. ‘ஹயபுசா 2’ என்ற பெயர் கொண்ட அந்த விண்கலம், ரையுகு என்ற சிறுகோளை ஆராய்ச்சி செய்ய கடந்த 2014ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது. பூமியில் இருந்து 195 மில்லியன் மைல்கள் தொலைவில் வைரக்கல் வடிவில் உள்ள அந்த சிறுகோளில் துளையிட்டு பல்வேறு வகையான மாதிரிகளை சேகரித்துக்கொண்டு ‘ஹயபுசா 2’ விண்கலம் திரும்பி வருவதாகக் கூறப்படுகிறது.

விண்கலம் கொண்டுவரும் மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம் கோள்களின் தோற்றம், பூமியிலுள்ள பெருங்கடல்களின் மூலம் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


Add new comment

Or log in with...