வடதுருவத்தின் பெரும் பனிப்பிரதேசம் மாயம் | தினகரன்


வடதுருவத்தின் பெரும் பனிப்பிரதேசம் மாயம்

வடதுருவப் பகுதியான ஆர்க்டிக் பிரதேசத்தில் மிகப்பெரிய பனிப்பிரதேசம் முற்றிலும் காணாமல் போனது ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்தின் வடக்குப் பகுதியில் 3 இலட்சத்து 86 ஆயிரம் சதுர மைல் பரப்பளவுள்ள மிகப்பெரிய பனிப்பிரதேசம் இருந்தது.

கடந்த 35 ஆண்டுகளில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக இந்தப் பகுதியில் பனி உருகும் வேகம் மிக அதிகமாக இருந்ததால், தற்போது அந்தப் பனிப்பிரதேசத்தின் 95 வீதம் பனி கரைந்து போனதாக அமெரிக்க நிலவியல்துறை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதே வேகத்தில் பனிகரையுமானால் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மீதமுள்ள 5 வீதமும் மாயமாகி விடும் என்று எச்சரித்துள்ளனர். 35 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த வீடியோவை டைம்லாப்ஸ் முறையில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...