ஷகிப் அல் - ஹசன் இரண்டு வீரர்களுக்கு சமமானவர் | தினகரன்


ஷகிப் அல் - ஹசன் இரண்டு வீரர்களுக்கு சமமானவர்

பங்களாதேஷ் அணி தலைவர் மொமினுல் ஹக், ஷகிப் அல் -ஹசன்

ஷகிப் அல் -ஹசன் இல்லாதது இரண்டு வீரர்களை இழந்ததற்கு சமம் என பங்களாதேஷ் அணி தலைவர் மொமினுல் ஹக் தெரிவித்துள்ளார்.

இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று தொடங்கியது. பங்களாதேஷ் அணியில் ஷகிப் அல்-ஹசன், தமிம் இக்பால் ஆகியோர் இணைக்கப்படவில்லை. இருவரும் அணியில் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். ஷகிப் ஹசன் இல்லாததால் மொமினுல் ஹக் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல் டெஸ்ட் குறித்து மொமினுல் ஹக் கூறுகையில் ‘‘மூன்று வீரர்களை இழப்பதாக நான் நினைக்கிறேன். ஏனென்றால் ஷகிப் அல்- ஹசன் இரண்டு வீரர்களுக்கு சமமானவர். அவர் இல்லாதது சவாலானதாக இருக்கும். இருந்தாலும், அதைப்பற்றி மிகப்பெரிய அளவில் சிந்திக்க வேண்டியதில்லை’’ என்றார்.


Add new comment

Or log in with...