அக்கரைப்பற்று றய்யான் சர்வதேச பாடசாலைக்கு தங்கப் பதக்கம் | தினகரன்


அக்கரைப்பற்று றய்யான் சர்வதேச பாடசாலைக்கு தங்கப் பதக்கம்

கிழக்கு மாகாண கராத்தே போட்டி:

இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண கராத்தே சம்பியன்சிப் போட்டியில் அக்கரைப்பற்று றய்யான் சர்வதேச பாடசாலை 02 தங்கம், 01 வெள்ளி, 03 வெண்கலம் பெற்று சாதனை படைத்துள்ளது.

இப் போட்டியில் எச்.அப்துர் றஹ்மான், எம். பாத்திமா அமாறா தங்கப் பதக்கத்தையும், எம்.எஸ்.முகம்மட் அபாஸ் வெள்ளிப் பதக்கத்தையும், எம்.எஸ்.அரீப், ஏ.யூனுஸ், எஸ்.அப்னத் சுஹா ஆகியோர் வெண்கலப் பதக்கத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுடன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஜி.எம்.சதாத், அதிபர் கே.எல்.அப்துல் மஜீத், டொக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தின் அதிபர் எம்.பி.செய்னுலாப்டீன் ஆகியோர் பாராட்டினர்.

 

(அக்கரைப்பற்று மத்திய நிருபர்)


Add new comment

Or log in with...