சர்வதேச WAFL வர்த்தக நாமம் இலங்கையிலும் | தினகரன்


சர்வதேச WAFL வர்த்தக நாமம் இலங்கையிலும்

பல்வேறுபட்ட வாஃபிள் மனுக்களுடனான, சர்வதேசப் புகழ்பெற்ற துரித உணவு வர்த்தக நாமமான WAFL இலங்கைக்கு வந்துள்ளது. பார்வையைச் சுண்டியிழுக்கும் வகையிலான அழகான, சுவையூறும் இனிப்புகளும் தின்பண்டங்களும் இவற்றிலடங்கும். இனிப்புகளும் தின்பண்டங்களும் WAFL இன்பாணியில் இனி இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ளன.

சூரியன் பளிச்சிடும் கலிபோர்னியாவிலோ, உறையும் குளிர் நிலுவும் சைபீரியாவிலோ சூடான அரேபிய நாடான லெபனானிலோ, ஆசிய நாடான இந்தியாவிலோ உலகின் எப்பகுதியிலும் இனிப்புக்கள் மற்றும் தின்பண்டங்கள் வரிசையில் முதலிடம் வகிப்பது WAFL தான்! குளிர்மையான ஐஸ்கிறீம் மற்றும் மென்மையான விப் கிறீமுடன், சாறு நிறைந்த பழங்கள், மற்றும் பெர்ரிக்கள், மொருமொரென்ற குக்கீகள், நட்டுகள் கண்கவர் ஸ்பிரிங்கிள்கள், வெவ்வேறான சுவைகொண்ட டொப்பிங்குகள் என்பவற்றுடன் அவை புதிய அனுபவத்தைத் தரவுள்ளன. இனிப்புச் சுவைகொண்ட WAFLஐ நாங்கள் இனிப்பு வகையாகவே உண்கின்றோம்.

எங்களுக்கு அதனை மிகவும் பிடித்திருந்தால் ஏன் அதனை இனிப்பான தின்பண்ட வகைக்குள் ஒதுக்குகின்றோம்? அதனாலேயே நாங்கள் இன்னொன்றைச் சிந்தித்தோம். எங்களால் அது முடிந்தது.

புதிய போக்கு என்னவென்று பாருங்கள், உங்கள் உணவை காரமான சுவைகொண்ட WAFL உடன் ஆரம்பியுங்கள். WAFL கோன் டோக், WAFL சன்விச், WAFL பை – அவை WAFL மாக்கலவையுடன் மிகவும் சுவையுடையதாக அமையும். WAFL கோர்ன்டோக் என்பது காரமானது.

ஆனால் அதனை வெறுமனே ஹொட்டோக் என்று மாத்திரம் எண்ணிவிட வேண்டாம்.

புதிய WAFL மாக்கலவையில் புத்தம்புதிய மரக்கறி மற்றும் சொசேஜின் சுவையை நீங்கள் அனுபவிக்கலாம். அவ்வாறான எதனையாவது நீங்கள் சுவைத்திருக்கின்றீர்களா? WAFL சன்ட்விச் என்பது முற்றிலும் மாறுபட்ட சுவையுடையதோடு, வழக்கமான WAFL பையையும் மறக்க வேண்டாம். இவை பிட்சாவுக்கான உள்ளீடுகளோடு காலத்துக்கேற்ற வகையில் புதிய சுவை அனுபங்களைத் தருபவை. ஆராக்கிய விரும்பிகளுக்கேற்ற வகையில் ஆரோக்கிமான, சுகாதாரமான ஆனால் சுவையான உணவு வகைகைள WAFL தருகின்றது.

ஆனால் இன்னும் பல கவர்ச்சிகள் உள்ளன. WAFL என்பது வண்ணமயமான உணர்ச்சிகளைப் பற்றியது- பலவிதமான மகிழ்ச்சிகளைப் பற்றியது. ஒவ்வொரு விருந்தினரும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறார்கள், ஏனென்றால் நீங்கள் எங்களுக்கு முக்கியம்.


Add new comment

Or log in with...