ஆசிரியர்களை கெளரவித்த ரெயின்கோ | தினகரன்


ஆசிரியர்களை கெளரவித்த ரெயின்கோ

ஆசிரியர்கள் வழங்கும் விலைமதிப்பில்லாத பங்களிப்பை போற்றி கெளரவிக்கும் வகையில் ரெயின்கோ பிரைவட் லிமிடெட், சர்வதேச ஆசிரியர் தினத்தை தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாகவும் அனுஷ்டித்திருந்தது.

நிறுவனம் தனது வருடாந்த ஆசிரியர் தின கொண்டாட்டத்தை மாத்தறை, ஹக்மன, நரவெல்பிட்டிய, சபுகஹமார கனிஷ்ட வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது தமது ஆசிரியர்களுக்கு கெளரவிப்புகளை வழங்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைத்திருந்தது.

இந்த ஆண்டின் கொண்டாட்ட நிகழ்வின் தொனிப்பொருளாக ஆசிரியர் நீங்களே உலகில் உதித்த சூரியன் என்பது அமைந்திருந்தது. இதனுௗடாக, ஆசிரியர்கள் சூரியனுக்கு ஒப்பிடப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் வாழ்க்கைக்கு ஒளியேற்றுபவர்களாக அமைந்துள்ளதை குறித்திருந்தது.

பொது மக்களிடம் சமூக வலைத்தளங்களினுௗடாக அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆசிரியர்கள் பற்றிய தமது சொந்த அனுபவ கதைகளை தெரிவிக்குமாறு இந்தத் திட்டம் அழைத்திருந்தது.

இந்த கோரிக்கைக்கு பெருமளவானோரிடமிருந்து ஆக்கங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், இவற்றிலிருந்து மாத்தறை, ஹக்மன, நரவெல்பிட்டிய, சபுகஹமார கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிகளவு உருக்கமான ஆக்கம் தெரிவு செய்யப்பட்டிருந்தது. மாத்தறை, ஹக்மன, நரவெல்பிட்டிய, சபுகஹமார கனிஷ்ட வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வண்ணமயமான நிகழ்வுடன், ரெயின்கோவிடமிருந்து பெறுமதி வாய்ந்த அன்பளிப்புகளை ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டனர். சிறுவர்களின் பெருமளவான தேவைகளையும் நிவர்த்தி செய்ய நிறுவனம் பங்களிப்பு வழங்கியிருந்தது.

எந்தவொரு குழந்தையின் வாழ்க்கையிலும் பெற்றோரை போன்றே, சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை ஆசிரியர் கொண்டிருப்பார்.

குறிப்பாக, ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறுவர்கள் மாத்திரமன்றி, மொத்த வகுப்பறையொன்றின் பொறுப்பையும், தினசரி கொண்டிருப்பார். ரெயின்கோவைச் சேர்ந்த நாம், இவர்களின் இந்த அர்ப்பணிப்பான செயற்பாட்டுக்கும், கடமைக்கும் கெளரவிப்பை வழங்கும் வகையில் இந்த நிகழ்வை நாம் வருடாந்தம் ஏற்பாடு செய்கின்றோம். என ரெயின்கோ பிரைவட் லிமிடெட் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஜனனி அமரதுங்க தெரிவித்தார்.

ஒழுக்கமான தலைமுறைகளை கட்டியெழுப்புவது மற்றும் ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையிலும் நீடித்திருக்கும் பெறுமதிகளை உள்வாங்குவது ஆகியவற்றை உணர்ந்து செயலாற்றும் ஆசிரியர்களின் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை புரிந்து கொண்டு, ரெயின்கோ பிரைவட் லிமிடெட், எப்போதும் பல பயனுள்ள பங்களிப்புகளை வழங்கிய வண்ணமுள்ளது.


Add new comment

Or log in with...