இரணைதீவு படகு சேவை; ஜனவரி முதல் நேர அட்டவணைக்கு அமைய | தினகரன்


இரணைதீவு படகு சேவை; ஜனவரி முதல் நேர அட்டவணைக்கு அமைய

கிளிநொச்சி இரணைதீவிற்கான பயணிகள் படகு போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நேர ஒழுங்குகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக இரணைதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்கம் தெரிவித்துள்ளது. 

கிளிநொச்சி பூநகரிப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட இரணைதீவில் கடந்த 28வருடங்களுக்குப் பின்னர் கடந்த மே மாதம் முதல் மக்கள் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர். 

இதுவரை 74குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளதுடன், தொழில்சார் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் குறித்த பிரதேசத்தில் தங்கி நின்று தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் இரணைதீவிற்கான படகுச்சேவை ஒன்றினை ஏற்படுத்தித் தருமாறு தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் இரணைதீவிற்கான படகு சேவை இரணைமாதா நகரிலிருந்து இம்மாத முற்பகுதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.  எனினும் அன்றைய தினத்தின் பின்னர் சேவைகள் மேற்கொள்ளப்படவில்லை என பிரதேச மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் குறித்த மீனவர் சங்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,.  

தற்போது மீனவர்கள், பொதுமக்கள் வழமைபோன்று மீன்பிடி படகுகளில் தமது பயணங்களை முன்னெடுக்கின்றனர் இருந்தாலும் பயணிகள் படகில் மேலும் பல வேலைகளை மேற்கொள்ளப்படவுள்ளன.தேவைகள் ஏற்படும்போது சேவைகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. இருந்தாலும் ஜனவரி மாதத்தில் இருந்து ஒழுங்குபடுத்தப்படும் நேர ஒழுங்குகளுக்கு அமைவாக தினமும் போக்குவரத்துச் சேவைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.   

பரந்தன் குறூப் நிருபர் 


Add new comment

Or log in with...