பேஸ்புக்கில் 5.5 பில்லியன் போலி கணக்குகள் நீக்கம் | தினகரன்


பேஸ்புக்கில் 5.5 பில்லியன் போலி கணக்குகள் நீக்கம்

பேஸ்புக் நிறுவனம் இந்த ஆண்டில் இதுவரை சுமார் 5.5 பில்லியன் போலிக் கணக்குகளை அகற்றியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

போலிக் கணக்குகளை அடையாளங்கண்டு அவற்றை முறியடிக்கும் திறனை மேம்படுத்தியிருப்பதாக அது குறிப்பிட்டது.

ஒவ்வொரு நாளும் அத்தகைய மில்லியன் கணக்கான கணக்குள் தடுக்கப்படுகின்றன.

ஏப்ரல் மாதத்திற்கும், செப்டெம்பர் மாதத்திற்கும் இடையே 3.2 பில்லியன் போலியான போஸ்புக் கணக்குகள் அகற்றப்பட்டன. கடந்த ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை இரு மடங்குக்கும் அதிகம் என்று நிறுவனம் கூறியது.

முதல்முறையாக இன்ஸ்டகிராம் கணக்குகளும் அவ்வாறு தணிக்கை செய்யப்பட்டதாக அது குறிப்பிட்டது. நிறுவனத்தின் கொள்கைகளுக்கு மாறான பதிவுகளைப் பெரும்பாலும், பயனீட்டாளர்கள் பார்ப்பதற்கு முன்பாகவே அடையாளங்கண்டு நீக்கிவிடுவதாகத் தலைமை நிர்வாகி மார்க் ஸக்கர்பர்க் கூறினார். அதற்கான மென்பொருளின் திறனை நிபுணர்களும் சரிபார்ப்பர். 35 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் அது தொடர்பில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வோரு ஆண்டும் பில்லியன் கணக்கான டொலர் அதற்காகச் செலவிடப்படுவதாகக் கூறப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த நடவடிக்கைககள் மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...