Thursday, March 28, 2024
Home » தச்சன்தோப்பு வீதியில் கொட்டப்படும் கழிவுகளால் பொதுமக்கள் சிரமம்

தச்சன்தோப்பு வீதியில் கொட்டப்படும் கழிவுகளால் பொதுமக்கள் சிரமம்

by sachintha
February 20, 2024 10:44 am 0 comment

சாவகச்சேரிப் பிரதேசசபைக்குட்பட்ட தச்சன்தோப்பு வீதியில் தொடர்ச்சியாக கொட்டப்படும் கழிவுகளால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில் மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்; ஏ9 வீதியையும் ஏ32 வீதியையும் இணைக்கின்ற தச்சன்தோப்பு வீதியை தினமும் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் இரவு வேளைகளில் இனந்தெரியாத நபர்களால் விலங்குக் கழிவுகள்,பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தக்கூடிய பெருமளவான கழிவுகள் வீதியில் கொட்டப்படுகின்றன. இவ்வாறு தொடர்ச்சியாக கழிவுகள் கொட்டப்படுகின்ற போதிலும் பிரதேசசபை அதனை அகற்ற முன்வராமையால் இவ்வீதி ஊடாக பயணிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

(சாவகச்சேரி விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT