கோதுமை விலை அதிகரிப்பு; செய்தி உண்மை இல்லை | தினகரன்


கோதுமை விலை அதிகரிப்பு; செய்தி உண்மை இல்லை

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க எந்த நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என  நுகர்வோர் விவகார அதிகார சபைதெரிவித்துள்ளது.

அத்தோடு, அனுமதியின்றி கோதுமை மாவின் விலையைஅதிகரித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சபை வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை,  அமைச்சரவையினால்நியமிக்கப்பட்ட வாழ்க்கை செலவுக் குழு மற்றும் நுகர்வோர் விவகாரஅதிகார சபையின் அனுமதிஇல்லாமல் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க முடியாது என, நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விற்றர் கணக்கில் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு ஒருசில ஊடக நிறுவனங்கள் வழமை போன்று மேற்கொண்டுள்ள பொய்  பிரசாரங்களில் எவ்வித உண்மையும் இல்லையெனஅமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 


Add new comment

Or log in with...