மாலையில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம் | தினகரன்


மாலையில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் நவம்பர் 15ஆம், 16ஆம் திகதிகளில் மாலையில் இடியுடன்  மழை பெய்வதற்கானசாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போதுமழை பெய்யுமெனஎதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பிற்பகல்1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும்குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மில்லிமீற்றர் அளவான  மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலைமைஎதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, இடியுடன் மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

 


Add new comment

Or log in with...