வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கப்படுகின்றதா? | தினகரன்


வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கப்படுகின்றதா?

கஃபே உன்னிப்பாக அவதானிப்பு

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவுபெற்ற அமைதி காலப் பகுதியிலும் தேர்தல் தினத்திலும் வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கப்படுகின்றதா? என்பதை அவதானிக்க, இம்முறை கஃபே அமைப்பு தமது நடவடிக்கையை விஸ்தரித்துள்ளது என கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்

இரத்தினபுரியில் நேற்று நடைபெற்ற செயலமர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை கஃபே அமைப்பிற்கு 735முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் அமைதி காலப்பதியானது மிகவும் அமைதியான முறையில் காணப்படுவதை அவதானிக்க முடிந்தது.

அமைதி காலப் பகுதியில் எட்டு முறைப்பாடுகள் மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளன. தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட பதாதைகள், சுவரொட்டிகள் போன்றவை இதுவரை அகற்றப்படாமல் இருப்பது தொடர்பாகவே எட்டு முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன.

தேர்தல் அண்மிக்கின்ற இந்த அமைதி காலப் பகுதியிலும் தேர்தல் தினத்திலுமே வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கும் செயற்பாடுகள் கடந்த காலங்களில் இடம்பெற்றன. இதற்கு முன்னரான தேர்தல்களில், இக் காலப்பகுதியிலேயே இலஞ்சம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அவற்றைக் கருத்திற்கொண்டு இம்முறை கஃபே அமைப்பானது, நீண்டகால மற்றும் குறுங்கால கண்காணிப்பாளர்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது என்றார்.


Add new comment

Or log in with...